ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் 14.60 யூரோவாக உயர்த்த முடிவு

77 0

ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியத்தை 14.60 யூரோவாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனி தனது குறைந்தபட்ச ஊதியத்தை 2027-க்குள் மணிக்கு 14.60 யூரோவாக உயர்த்தவுள்ளது. இந்த முடிவை அரசு நியமித்த குறைந்தபட்ச ஊதிய ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த ஊதிய உயர்வு இரண்டு கட்டங்களாக அமுலுக்கு வரும்.

முதலில் 2026 ஜனவரியில் தற்போதைய 12.82 யூரோவில் இருந்து 13.90 யூரோவாக உயர்த்தப்படும். அதனைத் தொடர்ந்து 2027ல் மேலும் €0.70 உயர்த்தப்பட்டு, நேரம் ஒன்றுக்கு €14.60 ஆக நிர்ணயிக்கப்படும்.

இந்த உயர்வால், ஜேர்மானிய ஊழியர்கள் மாதம் சுமார் 2,500 யூரோ வரை சம்பளம் பெறுவார்கள். இது லக்ஸம்பர்க் (Luxembourg) பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இரண்டாவது அதிகமான தேசிய குறைந்தபட்ச ஊதியமாகும்.

ஜேர்மனியின் குறைந்தபட்ச ஊதிய ஆணையத்தில் தொழிற்சங்கங்களும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வுகளை பரிசீலித்து வாக்களிக்கின்றனர். தொழிலாளர் அமைச்சகம் இந்த பரிந்துரையை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும்.

சமீப காலமாக, ஜேர்மனியில் பலர் அரச உதவிகளால் வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த ஊதிய உயர்வு நேர்மையான சமூக முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.