வெளிநாட்டவர்கள் தொடர்பில் புதிய விதிகள்: அறிமுகம் செய்யும் சுவிட்சர்லாந்து

96 0

 சுவிஸ் அரசு, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் இரண்டு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய உள்ளது.

1. பணி அனுமதி தொடர்பிலான விதி

ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் பணி அனுமதி பெறும்போது, அவர்களுக்கு இரண்டு வகையான பணி அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

ஓராண்டுக்கு மேல் சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்போருக்கு B அனுமதி, ஓராண்டு மட்டும் அனுமதிக்கப்படுவோருக்கு L அனுமதி.

ஆனால், சில நேரங்களில், குறுகிய காலம் தங்குவோருக்கு L அனுமதிக்கு பதிலாக B அனுமதி வழங்கப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக ஃபெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆகவே, பணி அனுமதி தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

2. வெளிநாட்டவர்களின் குடும்பங்கள் தொடர்பில் ஒரு விதி

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு வரும் நிலையில், அவர்கள் பணி தொடர்பில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளவேண்டியிருக்கும் என்று ஃபெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் தொடர்பில் புதிய விதிகள்: அறிமுகம் செய்யும் சுவிட்சர்லாந்து | New Immigration Rules In Swiss For Work Permit

தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு வருவோரையும் சுவிட்சர்லாந்துக்கு பயனுள்ளவர்களாக மாற்றும் வகையில், வேலை செய்யும் வயதுள்ள அனைவரும் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளவேண்டும்.

அதாவது,  தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு வருவோரும் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கவேண்டும், வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களும் வேலை செய்யவேண்டும் என்கிறது இரண்டாவது விதி.