பிரான்சில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில், முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் மற்றும் ஒரு தம்பதியர் என மூன்று பேர் பலியானார்கள்.
நேற்று, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில், சிறிய ரக சுற்றுலா விமானமொன்றில், தங்கள் 60 வயதுகளிலிருக்கும் ஒரு தம்பதியர் பயணிக்க, விமானத்தை 77 வயதான முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் இயக்கியுள்ளார்.
விமானம் புறப்பட்டு மூன்றே நிமிடங்களில், Champhol என்னுமிடத்தில் விமானம் விபத்துக்குள்ளாக, விமானத்தில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், விமானி சாதுரியமாக விமானம் குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தில் விழாமல் தவிர்த்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

