அகதிகள் ஆதரவு நடவடிக்கை ஒன்றை நிறுத்த ஜேர்மனி முடிவு

89 0

அகதிகள் ஆதரவு நடவடிக்கை ஒன்றை நிறுத்த ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அகதிகள் ஆதரவு நடவடிக்கை ஒன்று நிறுத்தம்

கடலில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை மீட்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இனி நிதி உதவி செய்யப்போவதில்லை என ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மத்தியதரைக் கடல் வழியாக புலம்பெயர்வோர் கடலில் தத்தளிக்கும்போது அவர்களை மீட்கும் குழுக்களுக்கு, நிதி வழங்குதை நிறுத்த ஜேர்மனி திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, நிதியமைச்சர் Lars Klingbeilஇன் புதிய பட்ஜெட் திட்டங்களில், புலம்பெயர்ந்தோர் மீட்புக் குழுக்களுக்கு பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அகதிகள் ஆதரவு நடவடிக்கை ஒன்றை நிறுத்த ஜேர்மனி முடிவு | Germany Plan To Stop Migrant Rescue Ngo Funding

ஜேர்மன் அராசாங்கம், ஆண்டொன்றிற்கு 2 மில்லியன் யூரோக்கள் வரை புலம்பெயர்ந்தோர் மீட்புக் குழுக்களுக்கு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.