சுவிஸ் நகரமொன்றில் அதிகரித்துவரும் ஒரு குற்றச்செயல்

65 0

சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில் மொபைல் பறிப்பு அதிகரித்துவருகிறது.

சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில், கடந்த ஜூன் முதல் இந்த ஜூன் வரையிலான காலகட்டத்தில், இதுவரை 280 மொபைல் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

 

விடயம் என்னவென்றால், அதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் கூட சூரிக் நகரில் நடந்ததில்லை என்கிறார்கள் சூரிக் பொலிசார்.

ஆக, நடந்துசெல்லும்போது குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டே நடக்காதீர்கள், சாலையின் ஓரமாக நிற்கும்போது மொபைலை எடுக்காதீர்கள், அப்படியே மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கமுடியாத சூழல் என்றால், ஒரு கட்டிடத்தின் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு மொபைல் பயன்படுத்துங்கள், அதாவது, உங்களுக்குப் பின்னால் யாரும் நிற்கவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள் சூரிக் பொலிசார்.