கறுப்புக்கொடி போராட்டத்தை மறந்து போன விமல்!

222 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மக்களிடம் கோரியிருந்தார்.

கடந்த 1ம் திகதி காலி முகத் திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பை வெளியிட்டு கறுப்பு கொடிகள் ஏற்றப்பட வேண்டுமென விமல் கோரியிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் சிறீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.

இந்திய பிரதமரின் சிறீலங்கா விஜயத்தின் ஊடாக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் உள்ளிட்ட நாட்டின் முக்கிய வளங்கள் இந்தியாவிற்கு தாரை வார்க்கப்பட உள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் மக்கள் கறுப்பு கொடியை ஏற்றி மோடியின் வருகைக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அவர் கோரியிருந்தார்.

எனினும், விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேனும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு கொடி போராட்டத்தை விமல் மறந்து விட்டாரா என்று மக்கள் கேலி வெளியிட்டுள்ளனர்.