நானுஓயாவில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து ; இரு மாணவர்கள் உட்பட மூவர் காயம்

63 0

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து திங்கட்கிழமை  (23) காலை நானுஓயா ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நானுஓயா பிரதான நகரில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போதே  விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும், இதில்  பயணித்த இரண்டு பாடசாலை மாணவர்களும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என  நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் முச்சக்கர வண்டி  கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.