UNFPA மற்றும் ADT, 12 மாவட்டங்களில் உள்ள 11 சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து, ஜூலை 1ஆம் திகதி காலை 9 மணி முதல் கொழும்பு 07, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) உள்ள ‘சப்பாயர்’ மண்டபத்தில் ‘எலிவேட் ‘25’ என்ற தலைப்பில் ஒரு நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கை முழுவதும் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களின் சமூக ஒற்றுமை, பாலினம் மற்றும் SRHR மற்றும் காலநிலை நீதி ஆகியவற்றில் திறன்களை வளர்ப்பதற்காக, ஜப்பான் அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (UNFPA) கூட்டணி மேம்பாட்டு அறக்கட்டளையை (ADT) ஆதரித்துள்ளது.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் (SRHR), பாலினம் மற்றும் காலநிலை நடவடிக்கை தொடர்பான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் இளைஞர்களால் வழிநடத்தப்படும் ‘சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல்’ என்ற திட்டம், பாலின சமத்துவம், காலநிலை நடவடிக்கை மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் (SRHR) ஆகியவற்றின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தூண்களாகவும், சமூகங்களுக்குள் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் அதன் முக்கிய பங்கையும் கருத்தில் கொண்டுள்ளது.
இந்த தனித்துவமான அணுகுமுறை ஆரம்பத்தில் 2019 ஈஸ்டர் தாக்குதல்களின்போது பெரும்பாலும் எழுந்த சமூகப் பிரச்சினைகளைக் கொண்ட திட்ட முயற்சிகளில் பயன்படுத்த வெளிக்கொண்டுவரப்பட்டது. 2019க்கு முன் இருந்த இந்தப் பிரச்சினைகள், சமூகங்களுக்குள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கணிசமாக பாதித்தன.
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகள் காலநிலை பேரழிவுகள் மூலம் வருகின்ற பாதிப்புக்கள் அதிகரித்து வருவதால், அவர்களை காலநிலை தகவமைப்பு மற்றும் மீள்தன்மையை உருவாக்குவதிலும் வடிவமைப்பதிலும் சமூகங்களில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானது.
காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் தலைமைத்துவத்தையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் உள்ளூர் ரீதியாக இயக்கப்படும், உள்ளடக்கிய தீர்வுகளுக்கான தேவை, அதிகரித்து வருகிறது.
அதன் அடிப்படையில் நடைபெறவுள்ள ஒரு நாள் நிகழ்வு, திட்ட முடிவுகளை காண்பிக்கும் மற்றும் குழு விவாதங்கள், விழிப்புணர்வு அமர்வுகள், மன்ற நாடக நிகழ்ச்சிகள், கைப்பாவை (பப்பட்) நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் பல காரியங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இது பாலினம் மற்றும் SRHR ஆகியவற்றின் சமூக ஒற்றுமை மற்றும் காலநிலை நீதியுடன் கூடிய தனித்துவமான, குறுக்குத்துறை அணுகுமுறைகள் கவனத்தை ஈர்க்கும் அதேவேளையில், முக்கிய பங்குதாரர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் ஈடுபடுவதன் மூலம் இடைவெளிகளைக் குறைக்கும்.
இது ஒரு இலவச பொது நிகழ்வாகும். இது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இச்செயல்பாட்டில் ஆர்வமுள்ள அனைவரையும் ‘மேம்படுத்தப்பட்ட இலங்கையை’ கற்பனை செய்யும் யாவரையும் இந்த தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள அனுபவத்தின் ஒரு பகுதியாக இணைந்துகொள்ளுமாறு நாங்கள் அன்புடன் அழைக்கின்றோம்.

