பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபைக்கு தலைவர் தெரிவில் எதுவித பாகுபாடும் இடம் பெறவில்லை என்று மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து தெரிவித்தார்.
மேற்படி பிரதே சபைக்கான தலைவர் தெரிவில் முறைகேடுகள் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்தே அவர் மேற்படி விளக்கமளித்தார்.
அவர் கண்டியில் வைத்து இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
தலைவர் தெரிவின் போது வாக்கெடுப்பு தேவைப்பட்டதன் காரணமாக எந்த அடிப்படையில் அதனை மேற்கொள்வது என்பதை பெரும்பான்மை விருப்பின்படி முடிவு செய்யப்பட்டது.
மூவர் போட்டியிட்டனர். தெரிவு திறந்த அடிப்படையில் இடம் பெற்றது. சட்டவிதிகளின் படியே நான் நடந்து கொண்டேன். எனவே அதில் எதுவித பாகுபாடுகளும் இடம் றெவில்லை என்றார்.

