யாழ். தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பினரால் “தேசாபிமானி” என்னும் விருதும், மனித உரிமைகளிற்கான மாகாண பணிப்பாளர் என்ற பதவியும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கொழும்பு அருங்காட்சியகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து இவ் விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (21) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.




