யுத்தத்தின் ஆரம்பம் – ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

71 0

ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் விமான தாக்குதல்களை யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் யுத்தத்தின் ஆரம்பம் என தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் நடவடிக்கை மோதலை முடிவிற்கு கொண்டுவராது என ஹெளத்தி கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் ஒருவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

அணுஉலையை அழிப்பது யுத்தத்தின் முடிவல்ல யுத்தத்தின் ஆரம்பம் அடித்துவிட்டு தப்பியோடும் காலம் முடிவடைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டால் செங்கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்குவோம் என நேற்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.