ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்டோ நட்டான்ஸ் இஸ்பஹான் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளோம் அனைத்து விமானங்களும் ஈரானின் வான்பரப்பிலிருந்து வெளியேறிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.
போர்டோ மீது குண்டுகள் வீசப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

