பல்லேகெலே திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

58 0

கண்டியில் அமைந்துள்ள பல்லேகெலே திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர்  தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகெலே பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி பொலன்னறுவை – கதுருவெல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவன் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகெலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.