கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு

268 0

கொழும்பிலிருந்து – வாரணாசிக்கான நேரடி விமானசேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடம்பெறுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் செவாக் தின நிகழ்வை இன்று ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாறு தெரிவித்தார்.

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் இந்தியா நம்பிக்கையுடன் இருக்கின்றது. மேலும் கொழும்பிலிருந்து – வாரணாசிக்கான நேரடி விமான சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகும். இதன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இலகுவாக சென்று தரிசிக்க முடியும்.

பௌத்த மதத்தின் தெய்வீக நறுமணம் இந்தியாவின் பல பகுதிகளிலும் பறந்துள்ளது. பௌத்த மதத்தின் நற்செய்திகளை உலக நாடுகள் பின்பற்றுமாயின், உலக நாடுகளில் தற்போது வளர்ந்துவரும்  வன்முறைகள் குறைந்துவிடும் என நான் நம்புகின்றேன்.

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. நட்பு ரீதியில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு உதவுவதற்கு தயாராகவுள்ளோம்.

அதுமாத்திரமின்றி இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்கு வழிசமைக்கும் முகமாக நாம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.