உலகிலேயே மிகவும் பழமையான மொழி பேசுபவர்கள் பெருந்தோட்ட மக்களே – மலையகத்தில் மோடி

218 0

உலகிலேயே மிகவும் பழமையான மொழியான தமிழ் மொழியைப் பேசுபவர்களாக பெருந்தோட்ட மக்கள் இருப்பதை எண்ணி பெருமையடைவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை இன்று திறந்து வைப்பதன் நிமித்தம் டிக்கோயாவிற்கு சென்ற இந்தியப் பிரதமர் மோடி நோர்வூட் மைதானத்தில் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது மேல்மாகாணம் மற்றும் தென் பகுதிகளில் ஆரம்பமாகியுள்ள 1990 அம்பியுலன்ஸ் வண்டி சேவைகளை மலையகம் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்திய அரசின் உதவியுடன் பெருபெருந்தோட்ட மக்களுக்கும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசுடன் இணைந்த 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் தொடர்பிலும் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பற்றியும் பெருமையுடன் நினைவு கூர்ந்ததுடன்,மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானையும் பெருமையுடன் நினைவுக் கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.