கண்டி, கம்பளை, அம்புலுவாவ பிரதேசத்தில் சுற்றுலா வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கண்டி பிரதேசத்திற்கு சுற்றுலா வந்துள்ள வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

