31.5 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களை சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர், கெக்கிராவை, இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்.
சந்தேக நபரின் பயணப்பொதிகளில் இருந்து, “ப்ளாட்டினம்” வகையைச் சேர்ந்த சிகரெட்டுகள் 21,000 ஐ உள்ளடக்கிய 105 சிகரெட் கார்டூன்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் ஜூன் 25ஆம் திகதி, சட்டவிரோதமாக சிகரெட் தொகையை நாட்டிற்கு இறக்குமதி செய்தல், கடத்தல் மற்றும் சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

