உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

71 0

வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  சனிக்கிழமை (14) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 42,44 வயதுடைய அறலகங்வில கஜுவத்த மற்றும் சீகிரிய இலுக்வல பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் ஆவர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக  சந்தேக நபர்களை அதிரடிப்படையினர் அறலகங்வில மற்றும் சீகிரிய பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அறலகங்வில பொலிஸாரும் சீகிரிய பொலிஸாரும்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.