இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி

75 0

குருணாகல் – மாத்தளை பிரதான வீதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சனிக்கிழமை (14)  உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயிணித்த  25 வயது இளைஞர் ஒருவரே மரணித்துள்ளார்.

இவர் தொடங்கஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை  குருணாகல் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.