இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகம் விஜயம்

256 0
இந்தியாவின் பிரதமர் ஒருவர் முதன்முறையாக மலையக பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.
இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் நோர்வுட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கண்டி தலதா மாளிகைக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.
மஹாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சுதந்திரத்துக்கு முன்னரான விஜயத்துக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் மலையக பகுதிக்குச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பிரதமரின் இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று, அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.
இந்த விஜயத்தின் விளைவாக, மலையகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.