யாழ்.சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று குறித்த வர்த்தகர் 330 போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களில் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது | Muslim Businessman Arrested Narcotic Pills Jaffna
இதன்போது, சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தக நிலையத்தை நடத்தும் 45 வயதான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக் கொள்வது தெரியவந்துள்ளது.அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.