100 ஆண்டு கனேடிய பல்கலைக்கழக வரலாற்றில் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்

9 0

கனடாவின்(Canada) புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார்.

100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இந்த பல்கலைக்கழகத்தில், முதல் தடவையாக பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள சென்றவரும், அதேநேரம் அந்த பட்டத்தை பெற்றவருமாக குசானி திகழ்கிறார்.

இலங்கையில் வேதியியல் பொறியியலில் ஒரு தேசிய டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்ட சந்தகிரி, பின்னர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெற்ற அனுபவமே தம்மை, கனேடிய கற்கைக்கு வழிவகுத்தது என்றும் குசானி குறிப்பிட்டுள்ளார்.

தாம் கனடாவில் படித்துக்கொண்டே, இலங்கையில் உள்ள தமது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதற்காக வேலை ஒன்றில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தாம் கனடாவில் எரிவாயு துறையில் தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.