பிரான்சில் பள்ளி ஒன்றில் நடந்த ஆண்டு இறுதி பார்ட்டி, கலவரத்தில் முடிந்ததால் பொலிசார் அழைக்கப்பட்டனர்.
கிழக்கு பிரான்சிலுள்ள Ferney-Voltaire என்னுமிடத்தில் Lycée சர்வதேச பள்ளி என்னும் பள்ளி ஒன்று அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று அந்தப் பள்ளியில் ஆண்டு இறுதி பார்ட்டி நடத்தப்பட்டது.
பார்ட்டியில் கலாட்டா நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததால் அவர்கள் பள்ளிக்கு விரைந்துள்ளனர்.
அப்போது, மாணவர்கள் பட்டாசுகளை கொளுத்தி பொலிசாரை நோக்கி வீசியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளார்கள்.
ஒரு 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டான். பொலிசார் அவனைத் துரத்திச் சென்று கீழே தள்ளி, டேஸர் ஒன்றைக் காட்டி மிரட்டி கைது செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பொலிசார் எல்லை மீறி செயல்பட்டுவிட்டதாகவும், அப்பாவி மாணவர்கள் கண்ணீர் புகை குண்டுகளால் காயமடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகார் கூறியுள்ளார்கள்.