கால்நடை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

73 0

கால்நடை வைத்தியர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை (09) ஆரம்பித்துள்ளது.

இதன் விளைவாக, அனைத்து அரசாங்க கால்நடை அலுவலகங்களின் பணிகளும் பாதிக்கப்படுவதுடன், மிருகக்காட்சிசலை திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், துறைமுகம், விமான நிலையங்களில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள கால்நடை வைத்தியர்களின் சேவைகளும் பாதிக்கப்படும் என அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உப்புல் ரஞ்சித் குமார தெரிவித்தார்.

அரசாங்கம் கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை யாப்பை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனை ஆரம்பிக்க தவறியது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று (09) காலை 6 மணிக்கு இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.