முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது

104 0

ராகமை பஸ் நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்தனர்.

ராகமை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்திய சோதனையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 9 கிராம் 480 மில்லிகிராம்  ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 14 ஐ சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை (04) 1,800,000 ரூபாய் மதிப்புள்ள முச்சக்கர வண்டி ஒன்று  கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட முச்சக்கர வண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.