விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!

68 0

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சநதேகநபரிடமிருந்து 7,600 சட்டவிரோத சிகரெட்டுகள் (28 கார்டூன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.