மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு

70 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக   மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (05)  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும்,

2017 செப்டம்பர் 22 ஆந் திகதியிலிருந்து தொடங்குகின்றதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றிஇ அத்தகைய செயல் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்குஇ இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய  இலங்கைத்   தமிழரசுக் கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் நேற்றையதினம் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.