சஷீந்திர ராஜபக்ஷவிடம் 7 அரை மணிநேர வாக்குமூலம் பதிவு

72 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

சீனாவிலிருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ததால் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (05) காலை ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், சஷீந்திர ராஜபக்ஷ  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 7 அரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.