கலவானையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!

69 0

இரத்தினபுரியில் பொத்துபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலவானை, வெத்தாகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலவானை, வெத்தாகல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுயைடவர் ஆவார் .

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மாடுகளை திருடிய நபர் ஒருவர் பிரதேசவாசிகள் சிலரால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொத்துபிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மாடுகளை திருடிய நபரை கைதுசெய்ய முயன்ற போது அந்நபர் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த நபர் சிகிச்சைக்காக  பொத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொத்துபிட்டிய  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.