விசுமடுவில் 19 வயது மாணவன் பலி எலிக்காச்சல் என சந்தேகம்

325 0
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம். சதீஸ்குமார்  எனபவரே காச்சால் காரணமாக  கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிசை பயனிற்றி திங்கள் இறந்துள்ளார். இரவது மரணத்திற்கு எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்படுவதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக  மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே கீழ்குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாகவைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு  கிளிநொச்சி சுhகதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்
எலிக்காச்சல் நோய்க்கான அறிகுறிகளாக காய்ச்சல், உடம்பு உளைச்சல், அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு, அல்லது உடல் அலுப்புஇ,போன்ற பிரதான நோய் அறிகுறிகளுடன் கண் சிவத்தல், சத்தி (வாந்தி) கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்இ சிறுநீர் வெளியேறுவது குறைதல்ஆகிய நோய் அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், சில நோயாளிகளுக்கு எந்த ஒரு குணம் குறியும் தென்படாது எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனா்.