மின்சார கட்டணம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானிப்பதில்லை. மின்சார உற்பத்தி செலவு தொடர்பாக தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு அதற்காக அமைக்கப்பட்டுள்ள சுயாதீன அணைக்குழுவான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தனது கேள்வியின்போது,
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை நூற்றுக்கு 18விதத்தால் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் உண்மை தன்மை என்ன?. மின்சாரக் கட்டணம் நூற்றுக்கு 18வீதத்தால் அதிகரிக்குமா என்பதையும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணை கிடைக்கப்பெரும் திகதி யாது என்பதையும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்றவகையில், உற்பத்தி செலவுக்கு அறவிட்டுக்கொள்ளும் குறித்த முறையின் ஊடாக அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் சேவைகளுக்காக நியாயமான விலைக்கு மக்களுக்கு அதனை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.
அதன் பிரகாரம் தரவுகள் மற்றும் அறிக்கைகளை ஆராய்து அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சுயாதின ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறுது.
மின்சார கட்டணம் தொடர்பில் அரசாங்கம் குறித்த ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கும் தரவுகள் மற்றும் அறிக்கைகளை ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார கட்டணம் அதிகரிப்பதா? எந்தளவு அதிகரிப்பது என தீர்மானிக்கும்.
அதனால் அரசாங்கம் எத்தனை வீதம் அதிகரிக்க வேண்டும் என தெரிவிப்பதில்லை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே அதுதொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என்றார்.

