கிளிநொச்சி இரணைதீவு மக்கள் 11 ஆவது நாளாக  போராட்டத்தில் ……. (காணொளி)

278 0

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்; நேற்றுடன் 10 ஆவது நாளை எட்டியுள்ளது.வளமாகவும், ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் ஆகின்றன.

எங்களை மீண்டும் ஊருக்குச் செல்ல விடுங்கள் என இரணைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட, சொந்த ஊருக்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாக தொடர்கிறது.இந்நிலையில் ஊருக்கு திரும்பும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.