இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் குறித்த மாநாடு

306 0
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்சியத்துக்கு இடையிலான வர்த்தக தொடர்புகள் குறித்த மாநாடு ஒன்று இந்த மாதம் நடைபெறவுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் இதற்கான ஒழுங்கை மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி, கொழும்பு – தேசிய சம்மேளன மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய அரபு ராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமிட் அல் முல்லா, கலந்து கொள்ளவுள்ளார்