பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தா” காயம்

134 0

 மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தா” என அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெல்லவாய பிரதேசத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தா” என்பவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார், போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தாவை” கைது செய்ய முயன்றுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் கடத்தல்காரரான “மஹவெலமுல்ல ஷான் சுத்தா” பொலிஸ் அதிகாரிகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனால் “மஹவெலமுல்ல ஷான் சுத்தா”வின் கால் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த மஹவெலமுல்ல ஷான் சுத்தா” வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.