பூனாகலை தோட்டத்தில் யானையின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த காலம் முதல் காட்டு யானையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரசால் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று (30) பூனாகலை மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டடம், கடைத்தொகுதி, பிரதேசத்தில் உள்ள இரண்டு கடைத்தொகுதிகள், தற்காலிகமாக இயங்கிவரும் தோட்ட வைத்தியசாலை என்பவற்றை காட்டு யானை சேதமாக்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில் இன்றைய தினம் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யானையின் அட்டூழியத்தை கட்டுப்படுத்துமாறும், யானைகளை யால சரணாலயத்துக்கு மாற்றுமாறும், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










