இந்திய பிரதமர் இன்று மாலை இலங்கைக்கு விஜயம்

368 0

ஐக்கிய நாடுகள் விசாக பூரணை தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதையடுத்து, நாளை காலை 9 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

இதன்படி, கண்டியில் இந்திய பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மேற்கொள்கிறார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நோர்வூர் மைதானத்தி;ல் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமது தலைமையின்கீழ் இயங்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், அபிவிருத்தித்துறை அமைச்சு பொறுப்பேற்று மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பழனி; திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஆகியோருடனும் மோடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இவ்வாறு இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை பிற்பகல் இந்தியாவுக்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.