பிலியந்தள துப்பாக்கிச் சூடு: மடூஷ், வெலே சுதா ஆகியோரின் திட்டம்- பொலிஸ்

318 0

பிலியந்தளயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், தெற்கிலுள்ள பாதால உலகக் குழுத் தலைவர் மடூஷ் மற்றும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா ஆகியோரின் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற ஒரு நடவடிக்கை என பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு கடந்த 09 ஆம் திகதி இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸார் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டும், ஆறு பேர் காயமடைந்தும் இருந்தனர்.

குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு 11 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது