மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடியா கற்கை நெறி நிலையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்த இராஜனமா செய்யும் அறிவிப்பு விடுத்துள்ளனர்.
இந்த இரண்டு ஆசனங்களை மட்டக்களப்பு நகரில் ஒருவருக்கும் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முஸ்லீம் பெண் ஒருவருக்கும் இந்த ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே கட்சிக்காக உழைத்த பலர் இருக்கின்ற நிலையில் ஒரு வருடத்துக்கு ஒருவர் என மாற்றி ஆசன ஒதுக்கீட்டை செய்யுமாறு கட்சியிடம் கோரினோம் கட்சி அதனை செவிமடுக்க வில்லை.
இந்நிலையில் மாநகர சபை தேர்தலில் 98 வீதம் தமிழ் வாக்குகளை பெற்று கொடுத்த நிலையில், எங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளை கொண்டு முஸ்லீம் பெண் ஒருவருக்கு போனஸ் ஆசனம் வழங்குவது குறித்து தமிழ் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
எனவே இது தொடர்பாக கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்தோம் ஆனால் அவர்கள் அதற்கான தீர்வை தரவில்லை எனவே இவ்வாறு தீர்வை வழங்காத நிலையில் கட்சியில் இருந்து நானும் மகளீர் அணி செயலாளரும் பதிவிலிருந்து விலக தீர்மானம் எடுத்து இராஜனாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

