உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பெறுபேறுகளின் பிரகாரம் அந்தந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் உரிய உள்ளூராட்சி அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் அந்தந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் தேர்தல் முடிவடைந்தவுடனே தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால் தேர்தல் முடிவடைந்து 21 நாட்கள் கடந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அத்துடன் உள்ளூராட்சி அதிகார சபைகளின் பதவிக் காலம் ஜூன் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டட உறுப்பினர்களின் விபரங்களை மேற்குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உரிய உள்ளூராட்சி அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


