இலங்கையில் சர்வதேச வெசாக் கொண்டாட்டம்! மகிழ்ச்சியில்மைத்திரி

244 0

சர்வதேச வெசாக் பௌர்ணமி தினத்தை இலங்கையில் நடாத்துவதற்கு கிட்டியமை பெரும் பாக்கியமாக கருதுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளை நடாத்த சந்தர்ப்பம் ஏற்பட்டமை ஒர் அரிய வாய்ப்பாகும்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே இதனைக் கருத வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 14ம் சர்வதேச வெசாக் பௌர்ணமி தின நிகழ்வுகளை நடாத்தும் பொறுப்பு இலங்கையிடம் வழங்கப்பட்டமையின் பின்னணியில் அண்மையில் சர்வதேச ரீதியில் அடைந்த வெற்றிகளும் அணி திரண்டு நிற்கின்றன.“சமூக நீதி மற்றும் பேண்தகு உலக சமாதானத்திற்கான பௌத்த கற்பிதம்” என்ற தொனிப் பொருளில் இலங்கையில் சர்வதேச வெசாக் பௌர்ணமி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

புத்த பிராணின் காலத்தில் சமத்துவம் மிகவும் முதன்மை பெற்ற ஓர் கொள்கையாகக் காணப்பட்டது.இன்று உலக சமூகத்தில், சமூக நீதி மிகவும் முதன்மையான அவசியமாக காணப்படுகின்றது. சமூக நீதியின் ஊடாகவே சமாதானத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்ப முடியும்.

குறுகிய எல்லைகளைக் கடந்து நாடு என்ற ரீதியில் உலக சமூகத்தில் பெருமிதம் மிக்க வகையில் எழுந்து நிற்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் திடசங்கம் பூணுவோம் என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.