கீதாகுமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்க முடியாது : கூட்டு எதிர்க்கட்சி

244 0

பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை உடனடியாக நீக்க முடியாது. அவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். ஆகவே அவர் தனது நியாங்களை முன்வைப்பதற்குள்ள சட்டரீதியான அவகாசம் இறுதி மணி நேரம் வரை உறுதிசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.