இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறை வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளின் 16 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு மிகவும் உணர்பு பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை (18) அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பிளாந்துறை வட்டாரக்கிளையின் தலைவர் மா.ஜீவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தின், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.புஸ்பலிங்கம், தழிழரசுக் கட்சியிலிருந்து தற்போது மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலயங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரிசியும், தண்ணீரும், உப்பும் சேர்த்து கஞ்சி காய்ச்சப்பட்டு பரிமாறப்பட்டதுடன், 16 சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்த நினைவஞ்சலி உரைகளும் நடைபெற்றன.





