சிறுவனை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

215 0

கம்பளையில் கடத்தப்பட்ட சிறுவன் மட்டக்களப்பு கரடியனாறு உறுகாமம் கிராமத்தில் வைத்து சனிக்கிழமை மீட்கப்பட்டான் .

இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை கம்பளை கங்கவட்ட வீதியைச் சேர்ந்த மூன்று வயதான முஹம்மத் சல்மான் மற்றும் சிறுவனது உறவு முறையான முகம்மட் அசாம் என்பவரும் காணாமல் போயிருந்தனர்.

பின்னர் காணாமல் போயிருந்த சிறுவனை அழைத்துச் சென்ற அசாம் என்பவர் மீள திரும்பிய நிலையில் அவரை கைது செய்து அவரிடம் மேற் கொண்ட விசாரணையையடுத்து மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உள்ள உறுகாமம் கிராமத்திலுள்ள வீடொன்றில் வைத்து சனிக்கிழமை காலை சுமார் 10:30 மணியளவில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை கொண்டு வரும் பொலிசார் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரசேத்தில் வைத்து கணவன் மனைவி ஆகிய இரு சந்தேக நபர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள இன்னுமொரு சந்தேக நபரை தேடி வருவதாகவும் குறித்த நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

அத்தோடு இந்த சிறுவனின் கடத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சிறுவனின் உறவு முறையான ஒருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

அதன்போது, வீட்டிலிருந்த சிறிய மகனும், அந்த இளைஞனுடன் செல்லவேண்டுமென அடம்பிடித்துள்ளார். ஆகையால், அந்த இளைஞனுடன் சிறிய மகனையும் அந்தப் பெண் அனுப்பிவைத்துள்ளார்.

எனினும், குறிப்பிட்ட இளைஞன், தன்னுடைய கணவன் இருந்த இடத்துக்குச் செல்லாமல், மகனுடன் தலைமறைவாகிவிட்டார் என சிறுவனின் தாய் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.