கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோத மதுபானத்துடன் இளைஞன் கைது!

89 0
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோத மதுபானம் வைத்திருந்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு முகாமைச் சேர்ந்த பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஆவான்.

சந்தேகநபரிடம் இருந்து, 37.5 லீற்றர் சட்ட விரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.