முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு – கட்டைபறிச்சான் பகுதியில் நேற்று புதன்கிழமை (14) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
\







