ஏணியில் ஏறியவர் கீழே விழுந்து மரணம்!

78 0

ஏணியில் ஏறிய நபரொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் 15ஆம் திகதி வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டின் கூரையினை ஏணியில் ஏறி சுத்தம் செய்ய முயற்சித்த 83 வயதுடைய நபர் ஏணியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

தலை, இடுப்புப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.