ஜனாதிபதியுடன் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சந்திப்பு

406 0

சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களின் குழு ஒன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்திக்கவுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை, அமைச்சரவைப் பேச்சாளராக பதவியில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக பிரிதொரு அமைச்சரை நியமிக்குமாறு அவர்கள் கோரவுள்ளனர்.

இதற்காக அவர்கள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவை பரிந்துரைக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த அமைச்சர்களின் குழு, நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மகிந்த அமரவீரவை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது இணங்கிக் கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே இன்று ஜனாதிபதியுடனான சந்திப்பை நடத்துகிறது.