வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று ஐந்தாவது நாளாகப் போராட்டத்தில்….(காணொளி)

373 0

 

கடந்த 15 வருடங்களாக பணியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள், 5ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 15 வருடங்களாக பணியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் 51 சுகாதாரத் தொண்டர்கள் வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சுகாதாரத் தொண்டர்களுக்கே முன்னுரிமை வழங்கு, நல்லாட்சி அரசே சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கு, தொண்டர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கு, வடமாகாணசபையின் சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கு போன்ற பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.