தேசபந்து தென்னகோனுக்கு விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு

73 0

தேசபந்து தென்னகோனை விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானது மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘ஐ.ஜி.பி டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனின் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ‘விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக இந்தக் குழுவின் முன் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட குழு தேசபந்து தென்னகோனுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த விசாரணைகளுக்காக தொடர்புடைய குழு பல நாட்களாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.