பிரிட்டன் நாட்டின் 1000 பெரும் பணக்காரகள் கொண்ட பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் என்ற இதழானது ஆண்டு தோறும் 1000 பேர் கொண்ட பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தனி நபர்கள் மற்றும் குடும்பத்தை சேர்ந்த பணக்காரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று வருகின்றனர்.
அதேபோல், பிரிட்டன் நாட்டின் 1000 பெரும் பணக்காரகள் கொண்ட பட்டியலை ’2017 சண்டே டைம்ஸ் ரிச் லிஸ்ட்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.1000 பெரும் பணக்காரர்களை கொண்ட இந்த பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஹிந்துஜா சகோதரர்கள் 16.2 பில்லியன் பவுண்ட் சொத்துக்களுடன் முதலிடதிதில் உள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஹிந்துஜா சகோதரர்கள் 3.2 பில்லியன் பவுண்டுகள் வருமானம் ஈட்டியுள்ளனர்.
கடந்த வெளியான பட்டியலில் இடம்பெற்ற சுமார் 500 பேருக்கும் மேல் இந்த ஆண்டு பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். மேலும், டேவிட் மற்றும் சிமோ ரெபென் சகோதரர்கள், லஷ்மி மிட்டல் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

